உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரம்: தமிழகத்தில் அதிர்ச்சி உணர்வுகள் எழுந்துள்ளன

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 20, 2013

இளஞ்சிறுவனின் மீது இராணுவம் திட்டமிட்டு நடத்திய படுகொலை குறித்த புதிய ஆதாரத் தகவல்கள், தமிழகத்தில் அதிர்ச்சியையும், கவலையையும், கோப உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் பிரமுகர்கள் தமது அதிர்ச்சியையும் கோப உணர்வுகளையும் தெரிவித்துள்ளார்கள்.


விஜயகாந்த் (தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்)

"உலக நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை ஐநா அவை மூலம் கோர வேண்டும்; இந்தியா, இலங்கைக்கு தரும் ஆதரவினை விலக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்"


ஜி. ராமகிருஷ்ணன் (சிபிஐ - மார்க்சிஸ்ட்)

"இலங்கை அரசும் அதன் இராணுவமும் நடத்திய மனித உரிமை மீறல் செயல்களுக்கு, குழந்தையின் மீது நிகழ்த்தியிருக்கும் இந்தப் படுகொலை ஒரு சான்றாகும். இலங்கை இராணுவத்தின் இச்செயலால் 'நாகரீகமடைந்த உலகின் தலை' தூக்கில் தொங்குகிறது. குற்றத்திற்குக் காரணமானவர்களும் இக்குற்றத்தை செய்தவர்களும் கடுமையான முறையில் தண்டிக்கப்படவேண்டும்"


தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் நேற்று முழுவதும் இந்த ஆதாரங்கள் குறித்து பேசப்பட்டன. இந்தியாவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதங்களில் வாசகர்கள் பலரும் தமது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளார்கள். கேலம் மெக்கரே எழுதியிருந்த கட்டுரை, தி இண்டிபென்டென்ட் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த அதே நாளில் (நேற்று) 'தி இந்து' நாளிதழும் அக்கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]