உள்ளடக்கத்துக்குச் செல்

மற்றோர் சூரிய குடும்பத்துக்கு நுண்கலனை அனுப்பத் திட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 13, 2016

ஒரு நுண்ணிய விண்கலனை, ஒரு தலைமுறை காலத்துக்குள் மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு அனுப்பும் அதிரடியான திட்டம் ஒன்று தொடங்கப்படுகிறது. கணினிகளில் வைக்கப்படும் சில்லுகள் (சிப்ஸ்) போன்ற அளவுள்ள இந்த நுண்ணிய கலன்கள் சாதாரணமாக இது போல மற்றொரு சூரியக் குடும்பத்தை அடைய வேண்டுமானால், பல ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டியிருக்கும்.

புதிய தொழில்நுட்பம்

[தொகு]

தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பயணித்தால் , இது போல மற்றொரு சூரியக் குடும்பத்துக்குப் போய்ச்சேர 30,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த சின்னஞ்சிறு கலன்கள் கொள்கையளவில், நமக்கு அருகேயுள்ள நட்சத்திரத்துக்கு 30 ஆண்டுகளுக்குள் சென்றடைந்துவிடலாம் என்று கூறுகிறார்கள்.

திட்டம்

[தொகு]

இந்தத் திட்டத்துக்கு உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆதரவு இருக்கிறது. இந்த கலன்கள் ஒவ்வொன்றும் சூரிய ஒளியால் இயங்கவல்ல இறக்கைகளைப் பெற்றிருக்கும். மேலும் அவை ஒளியாலும் உந்தப்படும். ஒரு பெரும் லேசர் கற்றையை உருவாக்கி, இந்தக் கலன்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]