மாலியின் வடக்கே வெளிநாட்டு இசுலாமியப் போராளிகள் வருகை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 24, 2012

ஜிகாட் போராளிகள் பலர் மாலியின் வடக்குப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர் என காவோ நகரத்தின் முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.


60 முதல் 100 வரையான அல்ஜீரியர்கள், மற்றும் சாராவிகள் (மேற்கு சகாரா) கடந்த ஐந்து நாட்களுக்குள் வடக்கு மாலிக்குள் வந்திருப்பதாக சடூ டியாலோ கூறினார். மேலும் 150 இற்கும் அதிகமான சூடானியப் போராளிகளும் சென்ற வார இறுதியில் மாலியின் திம்பக்து நகருக்குள் வந்திறங்கியுள்ளனர் என உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார்.


காவோ நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மேற்காப்பிரிக்க ஜிகாட் என்ற அமைப்பினர் உள்ளூர் குரான் பாடசாலைகளில் இருந்து 200 மாணவர்களைத் தமது படைகளில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 300 முதல் 400 டாலர்கள் வரை வழங்கப்படுகிறது.


இவ்வாண்டு ஆரம்பத்தில் வடக்கு மாலியை இசுலாமிய, மற்றும் துவாரெக் போராளிகள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இராணுவத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எக்கோவாஸ் என்ற பிராந்திய அமைப்பு 3,000 படைகளை அங்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. எக்கோவாசின் இந்த இராணுவத் தலையீட்டுக்கான திட்டவரைபு ஒன்றை 45 நாட்களுக்குள் தம்மிடம் தருமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அண்மையில் கேட்டிருந்தது.


மூலம்[தொகு]