மிகப்பெரும் வெளி-சூரியக் குடும்பம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்
புதன், ஆகத்து 25, 2010
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 17 பெப்ரவரி 2025: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது

ஐந்து முதல் ஏழு கோள்களை உள்ளடக்கிய சூரியக் குடும்பம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது எமது பூமியில் இருந்து 127 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.

பேரண்டத்தில் உள்ல மில்லியன் கணக்கான விண்மீன்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய சூரியக் குடும்பங்களில் இதுவும் ஒன்றாகும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இச்சூரியக் குடும்பம் எச்டி10180 (HD10180) என்ற விண்மீனை மையமாகக் கொண்டுள்ளது. இது எமது சூரியனை ஒத்த இயல்புகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் ஏழு கோள்கள் இக்குடும்பத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இவற்றில் ஒன்று எமது பூமியின் எடையை ஒத்ததாக உள்ளது.
ஐரோப்பிய தெற்கு அவதான நிலையத்தைப் பாவித்து வானியலாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இச்சூரியக் குடும்பத்தில் இருந்து உமிழப்பட்ட ஒளியைக் கொண்டு அவர்கள் அதன் இயல்புகளைக் கண்டறிந்துள்ளனர். ”இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளி உலகங்களில் இந்தப் புதிய உலகங்கள் மிகவும் கனதியானது,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோப் லோவிஸ் என்பவர் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மூலம்
[தொகு]- "Rich exoplanet system discovered". பிபிசி, ஆகத்து 24, 2010
- "Experts spot smallest planet outside solar system". அசோசியேட்டட் பிரஸ், ஆகத்து 24,2010
- "Vast solar system found 127 light years away". த டெலிகிராப், ஆகத்து 25, 2010