முதலாவது 'கலப்பு முளையக்' குரங்குகள் பிறப்பு
- 9 ஏப்பிரல் 2015: உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு
- 6 சூன் 2014: கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது
- 17 ஏப்பிரல் 2014: பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காணவில்லை
- 16 மே 2013: படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்
- 22 ஏப்பிரல் 2013: பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது
வெள்ளி, சனவரி 6, 2012
வெவ்வேறு முளையங்களில் (embryos) இருந்து பெறப்பட்ட கலங்களில் இருந்து அறிவியலாளர்கள் முதற்தடவையாக குரங்குகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
வெவ்வேறு இன விலங்குகளின் முளையங்களில் இருந்து உயிரணுக்கள் பெறப்பட்டு அவற்றை பெண் குரங்குகளில் செலுத்தப்பட்டு இவ்வகையான மிருகங்களை ஆய்வாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வகையான விலங்குகள் கிமீராக்கள் (chimeras) என அழைக்கப்படுகின்றன.
"செல்" எனப்படும் உயிரியல் ஆய்வு இதழில் இது குது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை அமெரிக்காவின் போர்ட்லாந்தின் ஒரிகோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். மருத்துவ ஆய்வுக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என அவர்கள் கூறுகின்றனர். கரு அபிவிருத்தி குறித்த ஆய்வுக்கு கிமீராக்கள் முக்கியமானவை ஆகும், ஆனாலும் இதுகால வரையிலும் சுண்டெலி வகைகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளன.
இவ்வகையில் உருவாக்கப்பட்ட மூன்று ரீசசுக் குரங்குகளுக்கு கிமேரோ, ரோக்கு, ரெக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வகையான வெவ்வேறு முளையங்களில் இருந்து பெறப்பட்ட உயிரணுக்களின் திசுக்களை இவை கொண்டுள்ளன.
மூலம்
[தொகு]- First 'mixed embryo' monkeys born, பிபிசி, சனவரி 5, 2012
- First mixed-embryo monkeys are born in US, ஏஎஃப்பி, சனவரி 5, 2012