உள்ளடக்கத்துக்குச் செல்

மூளை பார்ப்பதை வரையும் கருவி கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 24, 2011

மனிதர் பார்த்த திரைப்படக் காட்சிகளின் போது மூளையில் நிகழும் நிகழ்வுகளை வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவுக் கருவி (functional magnetic resonance imaging (fMRI)) கொண்டு பதிவு செய்து, அதைக் கணினி நிரல்கள் கொண்டு மீள் உருவாக்கம் செய்யும் முறையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை தற்போதைய உயிரியல் (Currenct Biology) என்ற ஆய்வேட்டில் வெளிவந்துள்ளது.


இது மூளையின் இரத்தத்தில் ஆக்சிசன் வாயுவின் அளவில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது. மனித பார்வைத் தொகுதி பற்றிய புரிவை இந்த ஆய்வு விரிவாக்க உதவியுள்ளது. பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதனை வெளியிட்டுள்ளனர்.


வெளி இணைப்புகள்[தொகு]