மேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 40 வீடுகள் தீக்கிரை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 31, 2009

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 40 வீடுகள் சேதமா னதாகவும் 33,000 ஏக்கர் காணிகள் எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை திடீரென இவ்விபத்து ஏற்பட்டது. அப்பகுதி இயற்கைப் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் இலிருந்து 80 கிமீ தொலைவிலுள்ள பண்ணைகள் நிறைந்துள்ள ஊரில் இத்தீ ஏற்பட்டது. மிகவும் வெப்பமான காலநிலை, வேகமாக வீசிய காற்று என்பவற்றால் தீ வேகமாகப் பரவியது.


பொதுமக்கள் முன்கூட்டியே இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேலான தீயணைப் புப் படையினர் தீயைக் கட்டுப் படுத்த கடுமையாக முயற்சித்தனர். இதில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகினர்.


நிலைமைகள் சீரடையும் வரை பொதுமக்களை அங்கு செல்ல வேண்டாமென அரசாங்கம் அறிவித் துள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பிரதமர் கோலின் பார்னெட் மாநிலத்தை இயற்கைப் பேரி டர் பகுதியாக அறிவித்தார். இதனால் அவசரகால நிதியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


சொத்துக்களைப் பாதுகாக்கும் எண்ணத்தில் மக்கள் மீண்டும் இருப்பிடங்களை நோக்கிச் செல்வார்கள் என்பதால் தீயேற்பட்ட பிரதேசத்துக் குள் எவரும் நுழையாமல் கண்காணிக்கப்படுகின்றது.


தீப்பிழம்புகள் காற்றினால் தாவப்பட்டு மரங்கள், கட்டடங்களும் எரிகின்றன. எரிந்த நிலையில் மரங்கள், கட்டடங்கள் என்பன வீதிகளில் விழுவதால் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் அடிக்கடி இவ்வாறு காட் டுத் தீயேற்படுகின்றது.


இவ்வாண்டு பெப்ரவரி மாதம் மெல்பேர்ண் நகரில் ஏற்பட்ட தீயால் 173 பேர் உயிரிழந்ததுடன் இரண்டாயிரம் வீடுகள் சேதமடைந்தன.

மூலம்[தொகு]