உள்ளடக்கத்துக்குச் செல்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் 21 புதிய இடங்கள் சேர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 5, 2010


பக்ராத்தி கதீட்ரல், ஜோர்ஜியா

பிரேசிலில் இடம்பெற்ற உலக பாரம்பரியக் களங்கள் குறித்த யுனெஸ்கோ மாநாட்டில் 21 புதிய பாரம்பரியக் களங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


தஜிகிஸ்தான், கிரிபட்டி, மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகிய நாடுகள் முதற்தடவையாக இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான அல்லது அழிவுறும் நிலையில் உள்ள களங்களாக நாகு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எக்குவடோரில் உள்ள கலாபகசுத் தீவுகள் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் மலையகப் பகுதி, ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர் வானவியல் சாஸ்திர ஆய்வு மையம், புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் தேசியப் பூங்கா, மடகாஸ்கரின் மழைக்காட்டுப் பகுதி ஆகியனவும் புதிதாக இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத் திட்டத்தை இதுவரை 184 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன.


இத்தாலியிலேயே அதிகளவு பாரம்பரியக் களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அங்கு 41 இடங்கள் பாரம்பரியக் களங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]