ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் பிரம்மாண்ட படம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 1, 2010


சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.


படிமம்:Rajinikanth in Chennai 2009.jpg
ரஜினிகாந்த்
படிமம்:Kamal Haasan.jpg
கமல்ஹாசன்

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கடைசியாக இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். அதன் பின்னர் அவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து தமக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு நடித்து வந்தனர். இவர்கள் இருவரையும் பல்வேறு தரப்பினர் ஒன்றாக நடிக்க வைக்கத் திட்டமிட்டு அது நடைபெறாமலே போய்விட்டது.


இந்நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்கக் கடும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. சில காலமாகவே இந்த முயற்சிகள் தீவிரமாகவே உள்ளதாக அதிகாலை.காம் செய்தியாளர் தெரிவிக்கிறார். சமீபத்தில் வெளியான 'ரெட்டச்சுழி' படத்தில் முதன்முதலில் இயக்குனர் தாமிரா இவர்களிருவரையுமே நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், கடைசியில் அந்த முயற்சியையும் கைவிடப்பட்டது.


ரஜினியையும், கமலையும் நடிக்க வைக்க தற்போதுத சிவாஜி பிலிம்ஸ் முயற்சித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கமலும், ரஜினியும் இணையப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மூலம்