உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 7, 2016

மேற்குப் பகுதி லிபியாவில் உள்ள கடலோர சலிடன் (Zliten) நகரில் காவல்துறைக்கு தேர்வானவர்கள் பயிற்சிக்கு சென்றிருந்த போது டிரக்கில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் இறந்தனர். முகமது கடாபி வீழ்ந்ததற்குப் பின் விபியாவில் நடந்த மோசமான டிரக் வெடிகுண்டு நிகழ்வு இதுவாகும். இந்தப் பயிற்சி மையத்தின் பெயர் அல்-சாபல் ஆகும். இது முன்னர் இராணுவத் தளமாக பயன்பட்டிருந்தது.


இதற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் சமீபகாலமாக லிபியாவில் இசுலாமிய தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டு, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு அந்நாட்டில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையே காரணம்.


மோசமான இவ்வெடிகுண்டு வெடித்த சத்தம் மைல்களுக்கு அப்பாலும் கேட்டதாக காமண்டி என்றவர் தொலைபேசியில் கூறினார். இறந்தவர்கள் அனைவரும் வயதில் இளையவர்கள் என்றும் அவர்கள் இப்போது தான் வாழ்க்கையை தொடங்கினர் என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் மிசுராடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஆரம்பத்தில் 65 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் பேரிடர் ஆணையமும் சுகாதாரத்துறை அமைச்சகமும் பின் 47 பேர் இறந்ததாகவும் 118 பேர் காயமுற்றதாகவும் தெரிவித்தனர். நாட்டின் எண்ணெய் வளத்திற்காகவும் ஒபெக் அமைப்பில் உறுப்பு ஆகவும் இந்நாட்டில் இரு அரசுகளும் பல ஆயுதக்குழுக்களும் இறங்கி நாட்டில் குழப்பம் நிலவுகிறது. இதனால் இசுலாமிய அரசு தீவிரவாத அமைப்பு இங்கு வலிமையடைந்து வருகிறது.


ஓராண்டுக்கும் மேலாக லிபியா விடியல் என்ற ஆயுதக்குழு தலைநகர் திரிபோலியை கட்டுக்குள் வைத்திருந்தது. தன் அரசை நியமித்திருந்தது. அதிகாரபூர்வ அரசு லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து செயல்பட்டது.


மூலம்

[தொகு]