உள்ளடக்கத்துக்குச் செல்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 20, 2016

வட கொரியா இந்த வாரத்தில் நடத்திய இரண்டாவது ஏவுகணை சோதனையும் தோல்வி அடைந்தது என தென் கொரிய அமெரிக்க இராணுவங்கள் தெரிவித்தன. சோதிக்கப்பட்டது நடுத்தர தொலைவு சென்று தாக்கும் முசுடான் ரக ஏவுகணையாகும்.


செயற்கோள் மூலம் ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததை கண்டதாக புதன்கிழமை அமெரிக்கா தெரிவித்தது (உள்ளூர் நேரம் வியாழக்கிழமை அதிகாலை) கொசாங் நகரில் இந்த ஏவுகணை சோதனையோட்டம் நடந்ததது.


2,500 மைல் செல்லும் நீண்ட தூர முசுடேன் ஏவுகணை இந்த வாரத்தில் சனிக்கிழமையன்று தோல்வியடைந்தது. இது குவாமிலுள்ள அமெரிக்க தளத்தை தாக்கும் வல்லமை உடையது.


இந்த ஆண்டில் நடத்தப்பட்ட எட்டு சோதனைகளில் ஒன்று மட்டுமே வெற்றி பெற்றது. வல்லுனநர்கள் இப்போது நடத்தப்பட்ட ஏவுகணை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என அச்சப்படுகின்றனர்.




மூலம்=

[தொகு]