உள்ளடக்கத்துக்குச் செல்

வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 17, 2018

அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியாவும் தென் கொரியாவும் ஒரே கொடியின் கீழ் கலந்து கொள்கின்றன. இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்த ஒரே பெண்கள் வளைபந்தாட்ட அணியை அனுப்பவும் ஒத்துக்கொண்டுள்ளன.


பிப்ரவரி 9 முதல் 25 வரை தென் கொரியாவின் பியியோங்சாங் நகரில் குளிர் கால ஒலிம்பிக் நடைபெற உள்ளது. வட கொரியா வீரர்கள் பங்குபெற்றால் வட கொரிய வீரர்கள் நில எல்லையை கடந்து வருவார்கள்.

பியியோங்சாங் நகரமுள்ள இடம் வரைபடத்தில்

மார்ச்சு மாதம் நடைபெறும் குளிர்கால மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கிற்கு வட கொரியா 150 பேர் கொண்ட சிறிய குழுவை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது.


வட, தென் கொரியாக்கள் இணைந்த குழுவின் காரணமாக தென் கொரியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தென் கொரியாவின் வளைபந்தாட்ட அணியின் பயிற்சியாளுரும் பழமைவாத இதழ்களும் கவலை தெரிவித்துள்ளன. இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்காணோர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர்.


சனிக்கிழமை சுவிர்ச்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெறும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை அனுமதிக்கவேண்டும். ஏனென்றால் வடகொரியா கலந்து கொள்ளுவதற்கான இறுதி தேதிக்குள் பதிவு செய்யவில்லை.


நிப்பான் இந்த முயற்சியை ஐயத்துடனே பார்க்கிறது. அதன் வெளியுறவு துறை அமைச்சர் வடகொரியாவின் இந்த நல்லெண்ண தாக்குதலில் வீழ்ந்துவிடக்கூடாது என்கிறார்.

பியியோங்சாங்


நிப்பானின் வெளியுறவு அமைச்சர் கோனோ வடகொரியாவின் மீதான தடைகளை தளர்த்த இது நேரமல்ல என்கிறார். அதன் மீதான தடை வேலை செய்வதால் தான் இப்போ அது தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்கிறார்.


ஆனால் தென் கொரிய அதிபர் அந்நாட்டு ஒலிம்பிக் வீர்களிடம் பேசும் போது வட கொரியான் பங்கேற்பால் இரு கொரியாக்களின் உறவு பலப்படும் என்றார். பின்னால் அணுஆயுதம் பற்றி பேசுவதற்கும் அமெரிக்காவுடன் வடகொரியா பேசவும் இது பயன்படும் என்பதாக யோன்ஏப் செய்தி நிறுவனம் கூறியது.

நவம்பர் 28ம் தேதி வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் மாமன்றம் அதன் மீது புதிய தடைகளை விதிக்க காரணமாகியது. அதன் பின்னர், பெட்ரோல் ஏற்றுமதிகள் மற்றும் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது

மூலம்[தொகு]