உள்ளடக்கத்துக்குச் செல்

வட அயர்லாந்தில் வெடிக்கத் தயார் நிலையில் 270கிகி வெடிகுண்டு மீட்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 29, 2012

ஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்தில் நியூரி என்ற இடத்துக்கு அருகில் 270 கிகி வெடிமருந்துகள் கொண்ட குண்டு ஒன்று வெடிக்கக்கூடிய நிலையில் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கைவிடப்பட்ட வாகனம் ஒன்றில் இந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்தமை வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலையில் இது பாதுகாப்பாக அகற்றப்பட்டது.


இரு ஆண்டுகளுக்கு முன்னர் நியூரி நீதிமன்ற வளாகத்தில் வெடித்த குண்டிலும் பார்க்க இது இரு மடங்கு எனக் காவல்துறை உயர் அதிகாரி அலிஸ்டர் ரொபின்சன் தெரிவித்தார். இது வெடித்திருந்தால் 100 மீட்டர் சுற்றளவில் பெருமளவு சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும் என அவர் தெரிவித்தார்.


கடந்த சில ஆண்டுகளாக வடக்கு அயர்லாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பிரிந்து சென்ற குடியரசு துணை இராணுவக் குழுக்கள் மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


மூலம்

[தொகு]