வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 11, 2013

அலாஸ்கா, கனடா மற்றும் பிற ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தின் காபனீரொக்சைட்டின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகம் (Mauna Loa Observatory) தெரிவித்துள்ளது.


மௌனா லோவ கண்காணிப்பகம் உலகின் மிகப் பழமையான கார்பன்டைஆக்சைடு தொடர் மதிப்பீட்டு நிலையமாகும். இந்த ஆய்வகம் அமெரிக்காவின் அவாய் தீவில் உள்ள மௌனா லோவ எரிமலையின் மீதுள்ள வளிமண்டத்தின் கார்பன்டைஆக்சைடு அளவை கண்காணித்து வந்தது.


மே 9 அன்று நேசனல் ஓசியானிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் (National Oceanic and Atmospheric Administration) அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலாஸ்கா, கனடா மற்றும் பிற ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தின் கார்பன்டைஆக்சைடு அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக காணப்படுகிறது என்றும், தென் அரைக்கோளத்தில் அடுத்த ஆண்டில் 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிக்கும் எனவும், 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய பைங்குடில் வளியானது 400 மில்லியனில் ஒரு பகுதிகளை தொடும் கூறியுள்ளனர்.


இவ்வாய்வு முடிவுகளை அடுத்து காலநிலை மாற்றம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவியலாளர்கள் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மூலம்[தொகு]