வவுனியா சிறைச்சாலைத் தாக்குதலில் படுகாயமடைந்த டில்ருக்சன் மரியதாஸ் உயிரிழந்தார்
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்
- 6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
புதன், ஆகத்து 8, 2012
இலங்கையின் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தெற்கே மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் டில்ருக்சன் மரியதாஸ் என்ற மற்றொரு அரசியல் கைதி ராகமை மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார் என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண அறிவித்துள்ளார்.
கடந்த மாத ஆரம்பத்தில் வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களில் 30 பேர் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். மகர சிறைச்சாலையில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஐந்து பேர் ராகமை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஐவரில் நிமலரூபன் என்பவர் சூலை 4 ஆம் நாள் உயிரிழந்தார். படுகாயமடைந்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்ட டில்ருக்சன் இன்று அதிகாலை 1:30 மணிக்கு உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
'இக்கொலைக்கு நாம் அரசாங்கத்தை பொறுப்பாளியாக்குகிறோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் சிவில் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மூலம்
[தொகு]- Another Vavuniya prisoner dies, டெய்லிமிரர், ஆகத்து 8, 2012
- கோமா நிலையிலிருந்த தமிழ் கைதி டில்ருக்ஷன் மரியதாஸ் உயிரிழந்தார், தமிழ்மிரர், ஆகத்து 8, 2012