வானூர்தியில் இருந்து தரைக்கு உடைக்கமுடியாத மறையீட்டுத் திறவியைக் கொண்ட தகவல் பரிமாற்றம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஏப்ரல் 13, 2013

தகவல்களைப் (உள்ளுருமைகளைப்) பாதுகாப்பதற்காக, வானூர்தியில் இருந்து தரைத்தளத்திற்கு அனுப்பப்படுகிற ஒளியன்களின் ஒரு துல்லிய ஒளிக்கற்றை மீது உடைக்கமுடியாத ஒரு மறையீட்டுத் திறவியை (encryption key) ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


செருமனியின் DLR DO வகை ஆய்வு வானூர்தி

செயற்கைக்கோள்களுக்கு ஒளியன்களைச் செலுத்திப் பெறுமாறு கடத்துதலை அடிப்படையாகக் கொண்ட பத்திரமானதொரு உலகளாவிய தெரிவிப்பு வலையமைப்பை ஆக்குதற்கு மார்ச்சு 31 நேச்சர் போட்டோனிக்சு அறிவியல் இதழில் அறிக்கையிட்ட இந்த சோதனை இன்றியமையாத ஒரு முன்னேற்றமாகும்.


செருமனியின் மியூனிக்கு என்ற இடத்தில் உள்ள இலூடுவிக்கு மேக்சிமிலியன்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் செபாசுட்டியன் நவுரெத் என்பவரும் அவரின் குழுவினரும் மணிக்கு 300 கி.மீ-இல் பறக்கும் Do 228-212 என்ற ஆய்வு வானூர்தியில் இருந்து ஒளியன்களை அனுப்பிப் பார்த்துள்ளனர்.


20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு தரை நிலையத்திற்கு, ஒளியன்களின் குறுகியக் கற்றையொன்றை அனுப்பும் ஒரு சீரொளியை அந்த வானூர்தியில் ஆய்வாளர்கள் பொருத்தியுள்ளனர். அதன் குறிகை (signal) போதிய வலுவானதாக இருக்கிறது என்றும், அனுப்புநர் வானூர்தியிலும் பெறுநர் தரை நிலையத்திலும் இருந்து கொண்டு துளிம மறையீட்டுத் திறவியை நிறுவக்கூடிய தடையங்காணுதல் போதிய துல்லியமானதாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் அறிக்கை கூறுகிறது.


மூலம்[தொகு]