விக்கிசெய்தி:2007/மே

விக்கிசெய்தி இலிருந்து
<ஏப்ரல் 2007 மே 2007 ஜூன் 2007>
  • மே 18 - இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இஸ்லாமிய மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். [1]
  • மே 17 - கொரியப் போருக்குப் பின்னர் முதற்தடவையாக வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே தொடருந்துப் போக்குவரத்து இடம்பெற்றது. [2]
  • மே 16 - ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த அலெக்ஸ் சமண்ட் (Alex Salmond) தெரிவு செய்யப்பட்டார். [3]
  • மே 16 - மேற்கு லாவோசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து, வியட்நாமிலும் உணரப்பட்டது. [4]
  • மே 14 - டொம் மூடி இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் மேற்கு அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட அணிப் பயிற்றுநராக ஜூலை 1இல் பதவியேற்பார். [5]
  • மே 14 - ரஷ்யாவில் ஓர்ஸ்க் என்னுமிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10பேர் மாண்டனர். [6]
  • மே 13 - திருகோணமலையில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் உட்படப் பலநிகழ்வுகளில் கலந்துகொண்ட மொறவேவாப் பகுதியில் தமிழில் சரளமாக உரையாடும் திறமையுள்ள வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ என்னும் புத்த மதகுரு இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். [7]
  • மே 13 - தலிபானின் முன்னணி இராணுவத் தலைவர் முல்லா அப்துல்லா கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். [8]
  • மே 13 - சிம்பாப்வே நாட்டின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி அந்நாட்டில் வருட இறுதியில் இடம்பெறவிருக்கும் துடுப்பாட்டத் தொடருக்கு செல்ல வேண்டாமென அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் தமது நாட்டுத் துடுப்பாட்ட அணியைக் கேட்டுக் கொண்டுள்ளார். [9]
  • மே 12 - கராச்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் அல்டாஃப் உசேன் அவர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர். [10]
  • மே 12 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கையின் மூன்று விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் வீடுகள் பல சேதமுற்றன. [11]
  • மே 12 - தாய்வானின் பிரதமர் சூ த்செங்-சாங் (Su Tseng-Chang) பதவிலிருந்து விலகினார். [12]
  • மே 10 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டோனி பிளையர் தாம் ஜூன் 27இல் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். [13]
  • மே 10 - தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். [14]
  • மே 10 - கிழக்குத் தீமோரில் நடந்த அதிபர் தேர்தலில் பிரதமர் ஜோசே ரமோஸ் ஹோர்ட்டா (José Ramos Horta) 73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். <ref?(ஏபிசி)</ref>
  • மே 7 - பிரான்சில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நிக்கலஸ் சர்கோசி 53 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
  • மே 7 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். [15]
  • மே 7 - மன்னார் வவுனியா வீதியை அண்டிய எல்லைப் புறக்கிராமங்களான பெரியதம்பனை மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் மே 6 நடந்த மோதல்களின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஐந்து சிப்பாய்களின் சடலங்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்பட்டன. [16]
  • மே 6 - இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற பெரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் 16 பேர் கொல்லப்பட்டும் 125,000 பேர் வீடிழந்தும் உள்ளனர். (ஏஎஃப்பி)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:2007/மே&oldid=5837" இலிருந்து மீள்விக்கப்பட்டது