உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட நான்கு அஞ்சற்தலைகள் பிரான்சில் வெளியீடு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 31, 2011

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் தாங்கிய ஒரு அஞ்சற்தலையுடன், விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட படங்களைத் தாங்கிய நான்கு அஞ்சல் தலைகள் கடந்த புதன்கிழமை பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளன.


அந்த முத்திரைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவம், தமீழீழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலரான கார்த்திகைப்பூ மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னம் ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் பிரான்சின் தபால் துறையின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டுகின்றது.


நேற்று முன்தினம் முதல் இந்த அஞ்சற்தலைகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு பிரான்சு வாழ் சிங்கள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்துத்தெரிவித்துள்ள பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலரான அகமட் ராசி, இப்படியான அஞ்சற்தலைகள் வெளியானதாக தமக்கு செய்திகள் கிடைத்ததாகவும், ஆனால் பிரான்சின் தபால் சேவையான லாபோஸ்ட் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது அப்படியான முத்திரை எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் அப்படியான முத்திரை எதுவும் வெளியாகியிருந்தால், அவற்றைத் தடை செய்யுமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை இலங்கை தூதரகம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]