விண்வெளிக்கு நகர்பேசியை எடுத்துச் செல்ல பிரித்தானியப் பொறியாளர்கள் திட்டம்
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: புதிய விண்மீன் பேரடை 'மிக அதிக தூரத்தில்' கண்டுபிடிக்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பூமி-கோள் மோதுகையாலேயே நிலவு தோன்றியது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: சந்திரனில் இறங்கி ஆய்வு நடத்த விண்ணுலவி ஒன்றை சீனா ஏவியது
- 17 பெப்ரவரி 2025: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்

திங்கள், சனவரி 24, 2011
விண்வெளிக்கு இவ்வாண்டில் நகர்பேசியை (mobile phone) எடுத்துச் செல்ல பிரித்தானிய ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்றைய தொலைபேசிகளின் அதிநவீன தொழில்நுட்பத்தை விண்வெளியில் பரிசோதிக்க இங்கிலாந்தின் கில்ட்ஃபோர்ட் நகரில் உள்ள சறே செய்மதித் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SSTL) நிபுணர்கள் எண்ணியுள்ளனர்.

கூகுள் அண்ட்ராய்டு நகர்பேசி இயக்க அமைப்பில் இயங்கக்கூடிய தொலைபேசியே கொண்டுசெல்லப்படவிருக்கிறது. இது 30 சமீ நீள செயற்கைக் கோளை இயக்கவும், பூமியின் படங்களை எடுக்கவும் பயன்படுத்தப்படவிருக்கிறது.
மிக உயரே பறக்கும் வளிக்கூண்டுகளில் நகர்பேசிகள் முன்னர் எடுத்துச் செல்லப்பட்டிருந்தனவாயினும், எமது கோளுக்கு வெளியே பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திற்கு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுவது இதுவே முதற்தடவையாக இருக்கும்.
"இன்றைய செல்லிடப்பேசிகள் வியக்கத்தக்க தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன," என SSTL திட்ட முகாமையாளர் சோன் கென்யன் தெரிவித்தார்.
"அவைகள் இப்போது 1GHz வரை இயங்கக்கூடிய செயலிகளுடன் உருவாக்கப்படுகின்றன, அத்துடன் அவை பெருமளவு திடீர் நினைவகத்தை (flash memory) கொண்டுள்ளன. முதலில் தொலைபேசிகளை அங்கு இயங்க வைக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும், அப்படி இயங்கினால், அதன் மூலம் ஒரு செய்மதியை இயக்க முடியுமா என ஆராய்வோம்," என்றார் கென்யன்.
மூலம்
[தொகு]- Mobile phone to blast into orbit, பிபிசி, சனவரி 24, 2011
- Scientists mulling sending mobile phone to space, இந்தியன் எக்ஸ்பிரசு, சனவரி 24, 2011