உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளி நிலையம் நோக்கி மூன்று புதிய விண்வெளி வீரர்கள் பயணம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 5, 2011

கசக்ஸ்தானில் உள்ள உருசிய பாய்க்கனூர் விண்வெளித் தளத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய சோயூஸ் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்பட்டது.


கரன், போரிசென்கோ, சமகுத்தியாயெவ்

திங்களன்று ஏவப்பட்ட இவ்விண்கலத்தில் சென்றுள்ள இரண்டு உருசியர்களும் ஒரு அமெரிக்கரும், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள ஒரு உருசியர், ஒரு அமெரிக்கர், மற்றும் ஒரு இத்தாலியருடன் வியாழக்கிழமை அன்று இணைந்து கொள்வர்.


உருசியர் அந்திரே பொரிசென்கோ (46), அலெக்சாண்டர் சமகுத்தியாயெவ் (40) ஆகியோர் முதல் தடவையாக விண்வெளிக்குச் செல்கிறார்கள். அமெரிக்கர் ரொன் கரன் (49) ஏற்கனவே 2008 ஆம் ஆண்டில் 13 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார்.


மூலம்[தொகு]