விருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 21, 2013

விருத்த சேதனம் செய்யப்படாத ஆண்குறிகளை விட விருத்த சேதனம் செய்த ஆண்குறியின் தலைப்பகுதியில் குறைவான நுண்ணுயிரிகளே இருப்பதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை பரிந்துரைக்கிறது. மேலும் இரண்டு வகையான ஆண்குறிகளிலும் வெவ்வேறு நுண்ணுயிரி வகைகள் காணப்படுவதாய் அவ்வறிக்கை கூறுகிறது.


விருத்த சேதனம் செய்யப்படுகிற ஆண்குறிகளால் ஏன் குறைவாக எச்.ஐ.வி பரவல் காணப்படுகிறது என்பது புரியாமலேயே இருந்து வந்தது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பு சூடாகவும், ஈரப்பதமாகவும் உள்ள ஆண்குறிக்கும், முழுதும் காய்ந்த நிலையில் உள்ள ஆண்குறிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது.


"இது ஒரு சீரிய வகையிலான ஆய்வு" என சிகாகோவில் உள்ள இலினொய் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் மற்றும் கொள்ளைநோயியலாளரான ராபர்ட்டு பெயிலி கூறுகிறார். ஆனால் இதுபோல் முன்தோல் நீக்கப்படுவதினால் கெச்சு.ஐ.வி பரவல் அதிகமாகாது என்று சொல்லவதற்கில்லை என்றும் இது அதற்கு மாறுபட்ட ஆய்வு எனவும் அவர் மேலும் கூறினார்.


ஏப்ரல் 16 அன்று வெளியிடப்பட்ட எம்பையோவின் அறிக்கையில், ஆண்குறியின் முன்தோலை நீக்கியப்பின், பெரும்பாலான நுண்ணுயிரிகள் அந்த இடத்தில் உயிர்வாயுக்கள் கிடைக்கபெறுவதாய் உள்ளதினால் அவை அங்கிருந்து ஓடிப்போய்விடுகின்றன.


இந்த மாற்றங்களை அறிய, உகண்டாவில் இருந்து 156 விருத்த சேதனம் செய்யப்படாத ஆண்களுடைய குறியின் முன்தோல் பூச்சு மாதிரி எடுக்கப்பட்டது. அதில் பாதி ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் பூச்சு மாதிரி எடுக்கப்பட்டது.


முதலில் குறைவான வேறுபாடுகளே காணப்பட்டன. பிறகு எடுக்கப்பட்ட மாதிரிகளில் விருத்த சேதனம் செய்யப்பட்ட ஆண்குறியில் குறைவான நுண்ணுயிரிகள் உள்ளதை கண்டறிந்தனர். ஒன்பது வகை உயிர்வளிவேண்டா பாக்டீரியா உயிர்வளி அதிகரிப்பினால் குறைந்து காணப்படுகின்றன.


மூலம்[தொகு]