உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பெயின் நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 13, 2011

ஸ்பெயினின் லோர்க்கா நகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர். புதன்கிழமை 4.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது. இரண்டு மணி நேரத்தின் பின்னர் மீண்டும் அதே நகரை 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியிருந்தது.


நகரின் ஆயிரக்கணக்கான வரலாற்றுத் தொன்மை மிக்க கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.


93,000 பேர் வசிக்கும் லோர்க்கா நகரின் அனேகமாக அனைத்துக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நிலநடுக்கத்தின் அளவு குறைவாக இருந்தாலும் மேற்பரப்புக்குக் கிட்டவாக இது நிலை கொண்டிருந்ததால் இதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. 1956 ஆம் ஆண்டில் கிரனாடாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.


மூலம்

[தொகு]