ஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, சனவரி 26, 2014

மெல்பேர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆத்திரேலிய ஓப்பன் டென்னிசுப் போட்டியின் இறுதிப் போட்டியில் உலகத் தர வரிசையில் எட்டாவதாக இருக்கும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டனிசுலாசு வாவ்ரிங்கா, உலகின் தர வரிசையில் முதலாவதாக இருக்கும் ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் வென்று வெற்றியாளராக வந்தார்.


வாவ்ரிங்கா (2010)

28 வயதுடைய வாவ்ரிங்கா பெற்ற முதலாவது பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்) இதுவாகும். அத்துடன் 17-தடவை பெருவெற்றித் தொடரை வென்ற ரொஜர் பெரடருக்கு அடுத்தபடியாக கிராண்ட் சிலாம் வென்ற இரண்டாவது சுவிசு நட்டவர் இவராவார்.


முதலாவது செட்டில் 6-3 என்று எளிதில் வாவ்ரிங்கா வென்றார். இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வென்றார். அதன் பின்னர் மிகவும் நிதானத்துடன் விளையாடிய எசுப்பானியரான நடால் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். ஆனாலும், 4வது செட்டை 3-6 என இழந்தார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg