உள்ளடக்கத்துக்குச் செல்

ஹொண்டுராசு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 350க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 16, 2012

ஹொண்டுராஸ் நாட்டின் சிறையில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 350 பேர் இறந்தனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிறையில் மொத்தம் 853 கைதிகள் இருந்தனர். இந்த சிறையானது நாட்டின் தலைநகர் டெகுச்சிகால்ப்பாவிற்கு வடக்கே கொமயாக்குவாவில் உள்ளது.


செவ்வாய் பின் இரவில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. பல கைதிகள் தங்களின் அறையிலேயே சிக்கிகுண்டு அடையாளம் காணமுடியாத அளவில் வெந்துள்ளார்கள். கைதிகளின் அறையின் சாவி இல்லாததாலும் அதை வைத்திருந்த காவலர்களை காணாததாலும் தீயணைப்பு வீரர்களால் அறைக்குள் மாட்டிய கைதிகளை வெளியே கொண்டு வரமுடியவி்ல்லை.


சில கைதிகள் அறையின் மேற்கூரையை பிய்த்து தீ விபத்திலிருந்து தப்பினார்கள். தீ விபத்துக்கு முன் சிறையில் கலகம் நடந்ததாக சில ஹொண்டுரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதை சிறைத்துறை தலைமை அதிகாரி மறுத்துள்ளார். ஹொண்டுரான் அதிபர் லோபோ இவ்விபத்து தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடக்கும் என்றும் விசாரணை நடக்கும் போது உள்ளூர் மற்றும் தேசிய சிறைத்துறை அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.


மூலம்[தொகு]