2000 ஆண்டு பழமையான ரோமர் காலத்து சுவர் இடிந்து வீழ்ந்தது
புதன், திசம்பர் 1, 2010
- 28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 19 ஏப்பிரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு
- 14 மார்ச்சு 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 11 மார்ச்சு 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு
இத்தாலியில் நேப்பில்ஸ் அருகேயுள்ள பொம்பெய் என்ற பண்டைய ரோமர் காலத்து நகரில் இருந்த 2000 ஆண்டு பழமையான சுவர் ஒன்று கடும் மழை காரணமாக இடிந்து வீழ்ந்தது.
"இச்சுவர் இரண்டாம் உலகப் போரின் குண்டுத் தாக்குதல்களினால் பெரிதும் சேதமுற்று இடிந்து வீழ்ந்து மீண்டும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் இடிந்து வீழ்ந்தது," என பொம்பெய் அதிகாரி ஒருவர் ஏஎஃபி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இந்தச் சுவர் 7 மீட்டர் நீளமானதாகும்.
சில வாரங்களுக்கு முன்னர் இங்கிருந்த மற்போர் வீரர்களின் மாளிகை ஒன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து பல உள்ளூர் பழமை பேணும் ஆர்வலர்கள் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தனர். பண்டைய நகரத்தைப் பாதுகாக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
நேப்பிள்ஸ் நகருக்கு தெற்கேயுள்ளது பொம்பெய் நகரம். இது கிபி 79 இல் இடம்பெற்ற வெசுவியுஸ் எரிமலையின் சீற்றத்தால் தரைமட்டமானது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகின்றனர்.
மூலம்
[தொகு]- Pompeii Collapse: 2,000-Year-Old Wall Falls Down, ஈப்போ டைம்ஸ், நவம்பர் 30, 2010