2010 சிங்கப்பூர் அழகியாக அனுஷா ராஜசேகரன் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 23, 2010

2010 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் அழகியாக 21 வயது மாணவி அனுஷா ராஜசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சீனாவில் வரும் அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு சிங்கப்பூர் அழகியைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் இன்டர்கொன்டினென்டல் விடுதியில் இடம்பெற்றது. இப்போட்டியில் மொத்தம் 21 பெண்கள் போட்டியிட்டனர். இறுதிச் சுற்றில் அனுஷா வெற்றி பெற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டார். ‘நளினப் பேரழகி’ என்ற பட்டத்தையும் அனுஷா பெற்றார்.


அனுஷா சரளமாகத் தமிழ்ப் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜசேகரன்-கலாராணி ஆகியோருக்குப் பிறந்தவர். இசுரேலிய நிறுவனம் ஒன்றில் விளம்பர நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் இவர், சிங்கப்பூரில் எம்டிஐஎஸ் பள்ளியில் உயிர்மருத்துவத் துறையில் பட்டப் படிப்பு படிக்கிறார். இவரது உயரம் 1.69 மீட்டர். இவர் பரதநாட்டியம் கற்றவர்.

மூலம்[தொகு]