2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 23, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் காலிறுதிப் போட்டிகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாகின்றன. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் 2011 பெப்ரவரி 17 முதல் நடைபெற்றுவரும் இப்போட்டிகளில் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான வங்காளதேச அணிக்கு காலிறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏ பிரிவில் சிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும் பி பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் முதல் சுற்றுப் போட்டிகளில் வெளியேறின.


இன்று ஆரம்பமாகும் காலிறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணியும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதுகின்றன. இப்போட்டி வங்காளதேசத்தில் டாக்கா நகரில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஆத்திரேலியா, இந்தியா அணிகள் அகமதாபாத் சர்தார் பட்டேல் அரங்கில் போட்டியிடுகின்றன. மூன்றாவது போட்டி நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் டாக்கா சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கிலும், நான்காவது போட்டி இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கிலும் நடைபெறவுள்ளன.


மூலம்[தொகு]