உள்ளடக்கத்துக்குச் செல்

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் தென்னாப்பிரிக்கா வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 26, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை 49 ஓட்டங்களால் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.


நேற்று வங்காளதேசத்தின் டாக்கா நகரில் சேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகள் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றது. ஜெசி ரைடர் 83 ஓட்டங்களைப் பெற்றார். மோர்னி மோர்க்கல் 46 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை வீழ்த்தினார்.


222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய தென்னாபிரிக்க அணி 43.2 பந்துப் பரிமாற்றங்களிலேயே சகல இலக்குகளையும் இழந்தது. அது பெற்ற மொத்த ஓட்டங்கள் 172. ஜாக் காலிஸ் 47 ஓட்டங்களைப் பெற்றார். ஜேக்கப் ஓரம் 39 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார்.


ஆட்டநாயகனாக நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம் தெரிவானார். நடுவர்களாக பாக்கித்தானின் அலீம் தர், ஆத்திரேலியாவின் ரொட் டக்கர் ஆகியோர் பணியாற்றினர்.


இன்று கொழும்பில் நடைபெறும் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் நியூசிலாந்து அணி அரையிறுதியில் மோதவுள்ளது.


மூலம்[தொகு]