8,000 மீட்டர்கள் உயரத்திலிருந்து குதித்து சுவிட்சர்லாந்து நபர் உலக சாதனை நிகழ்த்தினார்

விக்கிசெய்தி இலிருந்து
(8,000 மீட்டர்கள் உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செவ்வாய், சூன் 10, 2014

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்சிசன் உபகரணங்கள் எதுவும் இல்லாது 8,000 மீட்டர்கள் (26,200 அடி) உயரத்தில் இருந்து வெப்ப-வளிமக் கூண்டில் இருந்து குதித்து உலகசாதனை நிகழ்த்தினார்.


ரெமோ லாங் என்ற 38 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் வளிமக் கூண்டின் மூலம் 8,000 மீட்டர் உயரம் சென்று மேலே சென்று கீழே குதித்தார். 10 நிமிடங்களின் பின்னர் அவர் சுவிட்சர்லாந்தின் ஆர்பேர்க் என்ற இடத்தில் தரையிறங்கினார். அவர் இறக்கை ஆடை அணிந்திருந்தார்.


லாங் கீழே குதிப்பதற்கு முன்னர் சுமார் அரை மணி நேரம் இடைவிடாது ஆக்சிசனை சுவாசித்த வண்ணம் இருந்தார் என அவரது குழு தெரிவித்தது.


மூலம்[தொகு]