உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் குயின்ஸ்லாந்தில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 22, 2009

இரண்டாம் உலகப் போரின் போது, 1943ஆம் ஆண்டு மே 14ஆந் திகதி ஜப்பானின் நீர்மூழ்கி கப்பலால் கடலில் குண்டு வீசி தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கிய ஆஸ்திரேலியாவின் "ஏ.எச்.எஸ். செண்டார்" (AHS Centaur) என்ற கப்பல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


ஏ.எச்.எஸ். செண்டார்

இது ஆஸ்பத்திரி போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் தாதியர் ஆவர்.


இந்தக் கப்பலில் இருந்து 64 பேரை மட்டுமே உயிருடன் அப்போது மீட்க முடிந்தது. இந்த சோக சம்பவம் ஆஸ்திரேலியாவில் இன்னமும் மறையவில்லை.


இந்நிலையில் இந்த கப்பலைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது இக்கப்பல் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்தக் கப்பலை வெளியே எடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டுள்ளது.


இக்கப்பலை கண்டுபிடித்துள்ளதன் மூலம் பலியானோரை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் மனம் ஓரளவு சமாதானமடையும் எனக் கருதுகிறேன்.

—துணைப் பிரதமர் ஜூலியா கிலார்ட்

இதற்கான பணி அடுத்தமாதம் தொடங்கவுள்ளது. கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த அதிநவீன கேமராவை இறக்கி போட்டோ எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கப்பலை வெளியே எடுக்கும் பணி நடைபெறும்.


இது குறித்து ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் ஜுலியா கிலார்ட் தெரிவிக்கையில், "'ஏ.எச்.எஸ். சென்டார்' கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சோகம் நம் மனதில் இருந்து இன்னமும் மறையவில்லை. அக்கப்பலில் பணிபுரிந்த வீரம் செறிந்த 268 தாதியர் மற்றும் ஊழியர்கள் பலியாகினர். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. அக்கப்பலை கண்டுபிடித்துள்ளதன் மூலம் ஓரளவு அவர்களின் சோகம் மறையும். அவர்களின் மனம் சமாதானமடையும் எனக் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மூலம்

[தொகு]