உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியனை ஒத்த விண்மீன்களைச் சுற்றி வரும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 18, 2009


எமது சூரியனை ஒத்த இரு விண்மீன்களைச் சுற்றி வரும் குறைந்த திணிவுடைய 6 கோள்களை பன்னாட்டு விண்வெளி ஆய்வுக் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.


அமெரிக்காவில் ஹவாயில் உள்ள டபிள்யூ.எம்.கெக் விண்வெளி அவதான நிலையம் (W M Keck Observatory) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆங்கிலோ-ஆஸ்திரேலிய தொலைநோக்கி (Anglo-Australian Telescope) மூலமே மேற்படி புதிய கோல்கள் அவதானிக்கப் பட்டன.


பிரகாசமான '61 வேர்ஜினிஸ்' (61 Virginis) விண்மீனைச் சுற்றிவரும் 3 புதிய கோள்களை வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடிந்ததாக தெரிவித்த விஞ்ஞானிகள், மேற்படி நட்சத்திரமானது பூமியிலிருந்து 28 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளதாக தெரிவித்தனர்.


இந்த விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களும் எமது பூமியை விட 25 மடங்குகள் வரை திணிவுடையவையாகும்.


அதேசமயம், பூமியிலிருந்து 76 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள 'எச்.டி.1461' (HD 1461) என்ற விண்மீனைச் சுற்றி வலம் வரும் புதிய கோள் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோள் பூமியை விட 7.5 மடங்கு பெரியதாகும்.


'எச்.டி.1461பி' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கோளை மாலை வேளையில் வானம் தெளிந்த நிலையில் உள்ள போது வெற்றுக்கண்ணால் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் 'எச்.டி.1461' நட்சத்திரம் மேலதிகமாக இரு கோள்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]