உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்பிய போர்க்குற்றவாளி ஆஸ்திரேலியாவில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 13, 2010

சேர்பியாவின் முன்னாள் துணை இராணுவத் தலைவர் ஒருவர் போர்க் குற்றஙக்ளுக்காக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.


நெதர்லாந்து புலனாய்வுத் துறையினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் டிராகன் வசில்க்கோவிச் கைது செய்யப்பட்டதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


1991-1995 விடுதலைப் போரின் போது போர்க்குற்றம் இழைத்ததாக இவர் குரொவேசியாவில் தேடப்பட்டு வந்தார்.


ஆத்திரேலியப் பிரசையான வசில்க்கோவிச் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தாலும், போரின் போது பொது மக்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.


வசில்க்கோவிச் நாடு கடத்தைப்படுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அத்திரேலியாவின் உட்துறை அமைச்சர் பிரெண்டன் ஓக்கொனர் தெரிவித்தார். அதுவரையில் அவர் சிறையில் வைக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.


55 வயதான வசில்ல்கோவிச் முன்னர் 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தலைமறைவானார். உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதலின் பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.


15 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வசில்க்கோவிச் 1991 ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் சென்று குரொவேசியப் போராளிகளுக்கு இரானுவப் பயிற்சி அளித்து வந்தார். இவர் அங்கு கிராச்சினா மாகாணத்தில் பொதுமக்களைச் சித்திரவதைப் படுத்தியதாகவும், பல பொதுமக்கள், மற்றும் சிறைக் கைதிகளைச் சித்திரவதைப் படுத்திக் கொலை செய்ததாகவும் குரொவேசியா குற்றம் சாட்டியுள்ளது.

மூலம்

[தொகு]