உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து
மகாராஷ்டிராவில் மேற்குத் தொடர்ச்சி மலை

வெள்ளி, சூலை 24, 2009 மகாராஷ்டிரம், இந்தியா:


இந்திய மாநிலமான மகாராஷ்டிரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிய பல்லி இனம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


ஊர்வன வகை விலங்கினமான இதனை கொல்ஹாப்பூர் மாவட்டத்தில் வராட் கிரி என்ற அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். இதற்கு Cnemasspis kolhapurensis எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது வகை பல்லி இனம் இதுவாகும்.


மேற்கு மலைப் பகுதியில் இதற்கு முதல் நிலநீர் வாழிகள் மற்றும் ஊர்வனவற்றைப் பற்றி ஆய்வுகள் நடத்தப்படவில்லை என பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தைச் சேர்ந்த திரு கிரி பிபிசிக்குத் தெரிவித்தார். இம்மாதிரியான கெக்கோ (gecko) எனப்படும் சிறிய பல்லியினம் உலகில் வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவற்றின் கண்விழி நீள்வட்டமாக இல்லாமல் வட்டமானவை ஆகும்.


இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பல்லியினங்கள் Hemidactlyus sataraensis மற்றும் Hemidactylus aaronbaueri ஆகும்.

மூலம்

[தொகு]