இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2012
விக்கிசெய்தி இருந்து
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 25 மே 2013: பழம்பெரும் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்
- 18 மே 2013: கல்வியில் முன்னேறும் திரிபுரா
- 16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது
- 14 மே 2013: அமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு
- 13 மே 2013: அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் ஜெயலலிதா
இந்தியாவின் அமைவிடம்
இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ.கட்சி சார்பில் சங்மா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
தேர்தல் நாள் : 19 சூலை, 2012
சூலை 8:
- ரவீந்திரபாரதி சங்க தலைவர் பதவியில் இருந்து கடந்த 20-ந் தேதியே பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும், பிர்பூம் கல்லூரியின் தலைவர் பதவியை 2004-ம் ஆண்டே ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
சூலை 7:
- பிரணாப் முகர்ஜி இரண்டு ஆதாயம் தரும் பதவியை வகிப்பதால் அவரின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் சங்மா வலியுறுத்தியுள்ளார்.
- மேற்கு வங்க முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ், பிரணாப் முகர்ஜிக்கு மார்க்கிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் ஆதரவு சரியான முடிவே என தெரிவித்தார்.
சூலை 6:
- "பிரணாபுக்கு எதிரான எனது புகாரை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் உத்தரவு கிடைத்துள்ளது. சட்ட நிபுணர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்" - சங்மா (பா.ஜ.கட்சி)
- "பிரணாப்பின் அசல் ராஜினாமா கடிதத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் சென்றதாக கூறுகின்றனர். சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்" - பா.ஜ. மூத்த தலைவர் அலுவாலியா.
மூலங்கள் [தொகு]
- பிரணாப் முகர்ஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், தினகரன், 08-07-2012.
- ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பை ஆதரிக்கும் மா.கம்யூனிஸ்டு முடிவு சரியானது: புத்ததேவ் பேட்டி, மாலைமலர், 07-07-2012.
- ஆதாயம் தரும் பதவிகள் அனைத்தில் இருந்தும் பிரணாப் ராஜினாமா செய்துவிட்டாராம், ஒன் இந்தியா, 08-07-2012
- மேலும் இரு பதவிகளில் இருந்தும் பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்துவிட்டதாக அறிவிப்பு, தினத்தந்தி, 08-07-2012.
- பிரணாபுக்கு எதிரான புகார் நிராகரிப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார் சங்மா