சப்பான் அணு உலைகளை மூடுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 27, 2012

சப்பான் மேலும் ஒரு அணு உலையை முற்றாக மூடியதை அடுத்து அங்குள்ள 54 அணு உலைகளில் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் வரும் மே மாதத்தில் செயலிழக்கச் செய்யப்படும். ஃபுக்குசிமா பேரழிவிற்குப் பின்னர் தற்காலிகமாகவேனும் இந்த முடிவை எடுக்க சப்பான் முன்வந்திருக்கிறது. அணு உலைகளை மீளவும் திறக்கக் கூடாது என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


2011 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஆழிப்பேரலையை அடுத்து புக்குசிமா அணுமின் அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டது.


கண்காணிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளுக்காக கசிவசாக்கி-கரிவா அணுமின் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இது மீண்டும் திறக்கப்படுமா என்பது அறியப்படவில்லை.


புக்குசிமா விபத்துக்கு முன்னர் சப்பான் அதன் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை அணுவாற்றல் மூலமே பெற்றுக்கொண்டது. கண்காணிப்புக்காக மூடப்படும் அணு உளைகளை மீண்டும் திறப்பதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


மூலம்[தொகு]