சப்பான் அணு உலைகளை மூடுகிறது
- 7 டிசம்பர் 2012: சப்பானில் 7.3 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை
- 17 செப்டம்பர் 2012: சோயூஸ் டிஎம்ஏ-04எம் விண்கலம் மூன்று வீரர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது
- 9 செப்டம்பர் 2012: இஸ்ரோவின் நூறாவது விண்வெளித் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது
- 10 ஆகஸ்ட் 2012: தென் கொரிய அரசுத்தலைவர் சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அரசு முறைப் பயணம்
- 15 ஜூலை 2012: உருசியாவின் சோயுஸ் டிஎம்ஏ-05எம் விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது
செவ்வாய், மார்ச் 27, 2012
சப்பான் மேலும் ஒரு அணு உலையை முற்றாக மூடியதை அடுத்து அங்குள்ள 54 அணு உலைகளில் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் வரும் மே மாதத்தில் செயலிழக்கச் செய்யப்படும். ஃபுக்குசிமா பேரழிவிற்குப் பின்னர் தற்காலிகமாகவேனும் இந்த முடிவை எடுக்க சப்பான் முன்வந்திருக்கிறது. அணு உலைகளை மீளவும் திறக்கக் கூடாது என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2011 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஆழிப்பேரலையை அடுத்து புக்குசிமா அணுமின் அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டது.
கண்காணிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளுக்காக கசிவசாக்கி-கரிவா அணுமின் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இது மீண்டும் திறக்கப்படுமா என்பது அறியப்படவில்லை.
புக்குசிமா விபத்துக்கு முன்னர் சப்பான் அதன் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை அணுவாற்றல் மூலமே பெற்றுக்கொண்டது. கண்காணிப்புக்காக மூடப்படும் அணு உளைகளை மீண்டும் திறப்பதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மூலம் [தொகு]
- Japan left with one nuclear reactor after shutdown, பிபிசி, மார்ச் 26, 2012
- Japan down to one nuclear reactor after shutdown, ஏஎஃப்பி, மார்ச் 26, 2012