உள்ளடக்கத்துக்குச் செல்

செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

முன்னாள் சோவியத் குடியரசான செக் குடியரசில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.


அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், சமூக சனநாயகக் கட்சி 20% இற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளனர். தனியே ஆட்சியமைக்க இது போதுமானதாக இல்லை. இதனால் இங்கு மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக 19% வாக்குகளைப் பெற்று ஏஎன்ஓ கட்சி வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் 15% வாக்குகளைப் பெற்றனர்.


பீட்டர் நேக்கசின் கட்சி ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டதை அடுத்து கடந்த சூன் மாதத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.


மூலம்

[தொகு]