தமிழ் விக்கிபீடியாவின் இன்று உதய நாள்

விக்கிசெய்தி இலிருந்து

உலகில் உள்ள எதை பற்றி அறிவதாக இருந்தாலும் நம் கை தட்டுவது விக்கிபீடியா தான். இது 2001 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ் பதிப்பான தமிழ் விக்கிபீடியா இதே நாளில் தான் (செப்டம்பர் 30ஆம் தேதி 2003) மக்கள் பயன்பாட்டிற்கு உதயமானது. விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கணக்கை தொடங்கி கட்டுரைகளை எழுதும் வசதி தரப்பட்டுள்ளது. இதுவரை தமிழில் சுமார் 88 ஆயிரம் கட்டுரைகளும் 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனர் கணக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.