தானியங்கி அல்பா நாய் அறிமுகம்
விக்கிசெய்தி இருந்து
தொடர்புள்ள செய்திகள்
- 13 மே 2013: கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு
- 5 மே 2013: சீனாவில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு
- 30 ஏப்ரல் 2013: அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி
- 19 ஏப்ரல் 2013: இரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைக்க ஒரே சில்லுடன் கூடிய புதிய ஒலி செயலாக்கி உருவாக்கம்
- 19 ஏப்ரல் 2013: நுகர் மின்னணுக் கருவிகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி ஆற்றலூட்டும் மின்கலம் தயாரிப்பு
திங்கள், அக்டோபர் 3, 2011
நாயைப் போன்ற உடல் அமைப்புக் கொண்ட ஆனால் நாயை விட பல மடங்கு பெரிய தானியங்கி ஒன்றின் முன்வடிவம் ஒன்றை அதைத் உருவாக்கும் அமெரிக்காவின் பொசுட்டன் டைனாமிக்சு நிறுவனம் காட்சிப்படுத்தியது.
இந்த நாய் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறைக்காக அதன் ஆய்வு நிறுவன நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தானியங்கியின் முழுப் பெயர் காலாட் படை ஆதரவு ஒருங்கியம் (Legged Squad Support System) என்பது ஆகும்.
இந்த நாய் 400 இறாத்தல்கள் சுமக்கக் கூடியது. 24 மணித்தியாலங்களுக்குள் 20 மைல் போகக் கூடியது. கணினிப் பார்வையுடன் குறிப்பிடப்பட்ட இடத்துக்குப் போகக் கூடியது. பல்வேறு போர்ப் பயன்பாடுகளையும் கொண்டது.
மூலம் [தொகு]
- Unleash the Robot Dogs of War, நியூயோர்க் டைம்ஸ், அக்டோபர் 1, 2011
- Video: Watch ‘AlphaDog’ Robot Walk, Get Up, Fetch, செப்டம்பர் 30, 2011