பகுப்பு:தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகள்

Wikinews தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

ஷேன் வார்னேவுக்குப் பின் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர், என்ற பெருமையை பெற்றுள்ளார் இலங்கையின் முத்தையா முரளிதரன்.

இலங்கை - வங்கதேசம் அணிகளிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இன்று கண்டியில் நடந்தது.

டெஸ்ட் தொடரை ஏற்கனவே 2-0 என்ற நிலையில் அபாரமாக கைப்பற்றியிருந்த இலங்கை அணியினர், மூன்றாவது டெஸ்ட்டையும் கைப்பற்றும் நோக்குடன் இன்று விளையாடினர்.

இந்நிலையில்,இன்றைய ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வங்கதேச அணியின் சார்பில் ஆடிய செய்யத் ரசேலின் விக்கெட்டை கைப்பற்றி தனது 700 வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் இலங்கை அணியின் ஸ்பின்னர் பவுலரான முத்தையா முரளிதரன்.

ஆட்ட முடிவில் வங்கதேச அணியை 193 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் தோல்வியில் வீழ்த்திய இலங்கை அணி, இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த டெஸ்ட்டின் ஒவ்வொரு இன்னிங்ஸ்சிலும், முத்தையா முரளிதரன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிங்ஸ் தோல்வியடைந்த வங்கதேசம்

முதல் இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன வங்க தேசத்திற்கு எதிராக இலங்கை, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

சங்ககரா இந்த போட்டியிலும் இரட்டை சதம் அடித்து(222)கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று அசத்தினார். ஜெயவர்த்தனே 165 ரன்கள் குவித்தார்.

மூன்றாம் நாள் முடிவில், இலங்கை 500 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 370 ரன்கள் எடுத்தால், முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட முடியும் என்ற நிலையில். நான்காம் நாள் ஆட்டத்தை வங்கதேசம் இன்று துவக்கியது.

இந்நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்கத்துடன் களமிறங்கிய வங்கதேச அணி, உணவு இடைவேளைக்கு பின்னர் சிறிது நேரத்திலேயே 123 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறத் தொடங்கியது.அதன் பின்னர் 53 ரன்கள் மட்டுமே எடுத்து எஞ்சிய 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக, இடதுகை பேட்ச்மேனான நஃபீஸ் 64 ரன்களை சேர்த்தார்.இதில் மூன்று பவுண்டரிகளும் அடக்கம்.

வங்கதேச அணிக்கு கடந்த 2000 ம் ஆண்டு டெஸ்ட் மேட்ச் அந்தஸ்து கிடைத்த பின்னர், 49 போட்டிகளில் விளையாடியதில் அடைந்துள்ள 43 வது தோல்வி இதுவாகும்.5 போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், ஷிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி வங்கதேசம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

W

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்