பலாலி இராணுவ தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்

Wikinews தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

ஏப்ரல் 24, 2007:

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டதாகவும் 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.[1]

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன. விடுதலைப் புலிகள் நடத்திய வான்வழித் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டு மேலும் 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.[2]

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] அடிக்குறிப்புகள்

  1. (புதினம்)
  2. (பிபிசி)
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்