விக்கிசெய்தி:நீங்கள் செய்தி எழுதலாம்!
விக்கிசெய்திக்கு உங்களை வரவேற்கிறோம்! விக்கிசெய்தி ''உங்களால் நீங்களே கண்டு தொகுத்து எழுதும் செய்திக்கட்டுரைகள் அடங்கிய செய்தியூடகம். இங்கு, நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவர் எழுதியதே. இங்குள்ள எந்த ஒரு கட்டுரையையும் நீங்கள் திருத்த முடியும், அல்லது விரிவாக்க முடியும். ஒரு செய்தியில் நீங்களே சம்பந்தப்பட்டு இருந்தால், நடுநிலைமை கருதிப் புறவய நோக்கில் எழுதுவதற்கு, வேறு ஒரு விக்கிப்பயனரை நாடவும்.
இரு வகைச் செய்திக் கட்டுரைகள்
தொகுப்பாக்கம்
ஒரு செய்தி தொடர்பாகப் பல்வேறு நம்பத் தகுந்த ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்து, ஒரு தொகுப்புச் செய்திக் கட்டுரையை எழுதலாம். ஊடகங்களை மேற்கோளாகக் காட்டுவது மிகவும் தேவையானது.
மூலச் செய்தியாக்கம்
ஒரு செய்தி நிகழ்வைப் பற்றி நீங்கள் நேரடியாகப் பதிவு செய்யலாம். இயன்றவரை தகுந்த ஆதாரங்களை வழங்கவும். மேலும், உங்களின் 'மூலச் செய்தி' என்றும் குறிப்பிடவும்.