செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்
திங்கள், ஏப்பிரல் 19, 2010
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
2030களின் நடுப்பகுதிக்குள் செவ்வாய்க் கோளை சுற்றிவர மனிதனை அனுப்புவோம் என்று அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அறிவித்தார்.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் சென்ற வியாழக்கிழமை நடந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றினார்.
”அடுத்த 5 ஆண்டுகளில் நாசாவின் விண்வெளி திட்டங்களுக்கு 6 பில்லியன் டாலர்கள் அதிகமாக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தை தானியங்கி மூலம் ஆய்வு செய்ய இருக்கிறோம். சூரியனுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்படும்,” என்றார் அவர்.
2025 ஆம் ஆண்டளவில் முதற்தடவையாக சந்திரனுக்கு அப்பால் மனிதன் சென்று ஆய்வுகள் நடத்த புதிய விண்கலத்தை வடிவமைக்கத் திட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
”2035 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கோளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவோம். அவர்களை ஏற்றி செல்லும் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் செவ்வாயை சுற்றி வந்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டத்தில் செவ்வாயில் மனிதன் இறங்குவார்கள்” என ஒபாமா அறிவித்தார்.
தமது புதிய திட்டம் பெருமளவில் வரவேற்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மூலம்
[தொகு]- "Obama sets Mars goal for America". பிபிசி, ஏப்ரல் 15, 2010
- "செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் முயற்சி 30 ஆண்டுகளில் சாத்தியம்; அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா". தினகரன், ஏப்ரல் 19, 2010