பிரான்சில் இசுலாமியப் பெண்கள் முழு முகத்திரை அணியத் தடை
வியாழன், சூலை 15, 2010
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 14 திசம்பர் 2016: அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் மோசடி புகாரில் வழக்கை எதிர்கொள்கிறார்
- 6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது
- 24 செப்டெம்பர் 2014: இஸ்ரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது (மங்கள்யான்)
- 7 சூன் 2014: உலகில் முதன் முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் வைஃபை சேவை அறிமுகம்
பிரான்சில் முஸ்லிம் பெண்கள் முழு முகத்திரை அணிவதற்குத் தடை விதிப்பதற்கு அந்நாட்டின் கீழவை அங்கீகரித்துள்ளது. மொத்தம் 557 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 335 பேர் தடைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்.
வரும் செப்டம்பர் மாதம் மேலவையில் ஒப்புதல் பெற்ற பிறகு அது சட்டமாக்கப்படும்.
பொது இடங்களில் முஸ்லிம்கள் முகத்திரை அணிவதற்குத் தடை விதிக்கும் சட்டத்துக்கு பொது மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருந்தாலும் பிரான்சில் முஸ்லிம்களில் வெகு சிலரே முழு முகத்திரை அணிகின்றனர் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டவர்களின் தனி அடையாளம் பற்றிய விரிவான விவாதத்துக்குப் பிறகு அதிபர் நிக்கோலா சர்கோசி தடைக்கு ஆதரவு தெரிவித்தார்.
மக்களாட்சிக்கும் பிரெஞ்சுப் பண்புகளுக்கும் கிடைத்த வெற்றி. | ||
—நீதி அமைச்சர், பிரான்ஸ் |
வாக்களிப்புக்குப் பிறகு பேசிய நீதி அமைச்சர் மிஷெல் அலியோட்-மேரி, "மக்களாட்சிக்கும் பிரெஞ்சுப் பண்புகளுக்கும் கிடைத்த வெற்றி," என்றார்.
பிரான்ஸ் நாட்டின் இந்த வாக்களிப்பை இதர நாடுகளும் அணுக்கமாகக் கண்காணித்தன. ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் இதே போன்ற சட்டம் பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது.
மூலம்
[தொகு]- பிரான்ஸ்: முழு முகத்திரைக்குத் தடை; எம்பிக்கள் வாக்களிப்பு, தமிழ் முரசு, ஜூலை 15, 2010
- French MPs vote to ban Islamic full veil in public, பிபிசி, ஜூலை 13, 2010
- French deputies pass face veil ban, அல்ஜசீரா, ஜூலை 14, 2010