உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சில் இசுலாமியப் பெண்கள் முழு முகத்திரை அணியத் தடை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 15, 2010

பிரான்சில் முஸ்லிம் பெண்கள் முழு முகத்திரை அணிவதற்குத் தடை விதிப்பதற்கு அந்நாட்டின் கீழவை அங்கீகரித்துள்ளது. மொத்தம் 557 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 335 பேர் தடைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்.


வரும் செப்டம்பர் மாதம் மேலவையில் ஒப்புதல் பெற்ற பிறகு அது சட்டமாக்கப்படும்.


பொது இடங்களில் முஸ்லிம்கள் முகத்திரை அணிவதற்குத் தடை விதிக்கும் சட்டத்துக்கு பொது மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருந்தாலும் பிரான்சில் முஸ்லிம்களில் வெகு சிலரே முழு முகத்திரை அணிகின்றனர் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


பிரான்ஸ் நாட்டவர்களின் தனி அடையாளம் பற்றிய விரிவான விவாதத்துக்குப் பிறகு அதிபர் நிக்கோலா சர்கோசி தடைக்கு ஆதரவு தெரிவித்தார்.


மக்களாட்சிக்கும் பிரெஞ்சுப் பண்புகளுக்கும் கிடைத்த வெற்றி.

—நீதி அமைச்சர், பிரான்ஸ்

வாக்களிப்புக்குப் பிறகு பேசிய நீதி அமைச்சர் மிஷெல் அலியோட்-மேரி, "மக்களாட்சிக்கும் பிரெஞ்சுப் பண்புகளுக்கும் கிடைத்த வெற்றி," என்றார்.


பிரான்ஸ் நாட்டின் இந்த வாக்களிப்பை இதர நாடுகளும் அணுக்கமாகக் கண்காணித்தன. ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் இதே போன்ற சட்டம் பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது.

மூலம்

[தொகு]