உள்ளடக்கத்துக்குச் செல்

1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சூத்திரதாரி பொய்ச்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 19, 2010

1985 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமானத்தை அழித்த குண்டைத் தயாரித்த கனேடியர் ஒருவர் பொய்ச்சாட்சியம் அளித்ததற்காகக் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.


இந்தர்ஜித் சிங் ரெயாட் என்ற இந்த நபர் இவ்விமானக் குண்டுவெடிப்புக்கு சூத்திரதாரி என்ற வகையில் 2003 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இவ்விமானக் குண்டுவெடிப்பில் 329 பேர் கொல்லப்பட்டனர்.


இவர் பின்னர் இரண்டு சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிக்கையில், தான் தயாரித்த குண்டு எதற்காகப் பயன்படுத்தப்படப் போகிறது அல்லது எந்த அமைப்பு இதனைப் பயன்படுத்தப் போகிறது போன்ற விபரங்கள் தனக்குத் தெரியாது எனக் கூறியிருந்தார். அந்த இரண்டு தீவிரவாதிகளும் போதிய சாட்சியமின்மையால் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.


வான்கூவரில் நடந்த பொய்ச்சாட்சிய வழக்கில் ரெயாட் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் காட்டுவதற்காகவும், மற்றவர்களைக் காப்பதற்காவும் பொய் சொன்னார் என அர்சுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.


இவருக்கான தீர்ப்பு பின்னொரு நாளில் வழங்கப்படவிருக்கிறது. பொய்ச்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகக் காணப்படுபவர்கள் பொதுவாக அதிக பட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவர் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஏர் இந்தியா ‌விமான‌ம் அ‌ட்லா‌ண்டி‌க் கட‌லி‌ல் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கிய‌தி‌ல் அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த ‌சி‌ப்ப‌ந்‌திக‌ள் உ‌ள்பட 329 பய‌ணிகளு‌ம் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.


இவ்விமானம் தகர்க்கப்பட்ட அதே நேரத்தில் வேறொரு குண்டு சப்பான் விமானநிலையத்தில் வைத்து விமானம் குறித்த நேரத்திற்கு முன்பதாகவே வெடித்ததில் இரண்டு விமான நிலைய ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.


இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் 1984ஆ‌ண்டு ‌சி‌க்‌‌கிய‌ர்க‌ளி‌ன் பு‌னி‌த்தலமான பொ‌ற்கோ‌யிலு‌க்கு‌ள் ‌‌நுழை‌ந்த தீ‌விரவா‌திக‌ள் ‌மீது இ‌ந்‌திய இராணுவ‌த்‌தின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதற்குப் ப‌ழி வா‌ங்கு‌வதற்காகவே நடத்தப்பட்டவை எனக் கூறப்பட்டன.


பல ஆண்டுகள் நடந்த விசாரணைகளின் பின்னர் ரிப்புதாமன் சிங் மாலிக், அஜிப் சிங் பக்ரி என்ற இரண்டு கனேடிய சீக்கியர்கள் இக்குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர் போதிய சாட்சியமின்மையால் விடுவிக்கப்பட்டனர்.


இவ்விசாரணையில் பொய்ச்சாட்சியம் அளித்த ரெயாட் 1991 ஆண்டில் சப்பான் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர். 2003 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமானக் குண்டு வெடிப்புத் தொடர்பாக கனேடிய நீதிமன்றத்தினால் மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.


2006 ஆம் ஆண்டில் இவர் பொய்ச்சாட்சிய வழக்கில் கைது செய்யப்பட்டு சூலை 2008 ஆம் ஆண்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இப்போது அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.


கடந்த சூன் மாதத்தில் கனடாவில் இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் ‌‌சீ‌க்‌கிய ‌தீ‌விரவா‌திகளா‌ல் ஏ‌ர் இ‌ந்‌தியா ‌விமான‌ம் தக‌ர்‌‌க்க‌ப்ப‌டலா‌ம் எ‌ன்று அ‌றி‌ந்‌திரு‌ந்து‌ம் கனடா நா‌ட்டு பாதுகா‌ப்பு படை‌யின‌‌ர் அல‌ட்‌சியமாக இரு‌ந்ததா‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு ‌ச‌ம்பவ‌ம் நிக‌ழ்‌ந்து‌‌ள்ளதாக தெ‌ரி‌வித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு அளிக்கவும் உத்தரவிட்டது.

மூலம்

[தொகு]