சீனாவின் சின்சியாங் பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 1, 2012

சீனாவின் தென்மேற்கு பகுதியான சின்சியாங் உய்கூர் என்ற மலைப்பிரதேசப் பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர்.


சீனாவின் சின்சியாங் யி லீ கசாக் தன்னாட்சி மாவட்டத்தில் நேற்றுக் காலை உள்ளூர் நேரம் 06:00 மணிக்கு 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. 22,000 பேரின் குடியிருப்புப் பகுதிகள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன. குறைந்த பட்சம் 41 பேராவது காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


தொடருந்துப் போக்குவரத்தும் இந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக நெடுஞ்சாலை 217, மற்றும் 218 ஆகியவற்றில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள, பராமரிப்பு மீட்புதவிப் பிரிவுகள், பெரிய ரக இயந்திரங்கள் ஆகியவற்றை, போக்குவரத்து வாரியம் அனுப்பியுள்ளது.


மூலம்[தொகு]