உள்ளடக்கத்துக்குச் செல்

சிலி சிறையில் தீ விபத்து, 83 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 9, 2010

சிலியின் தலைநகர் சான்டியாகோவில் சான் மிகுவேல் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தீப்பற்றியதில் குறைந்தது 83 கைதிகள் தீயில் கருகி மாண்டனர். சிறைக்காவலாளிகள், மறும் தீயணைப்பு வீரர்கள் உட்பட மேலும் 14 பேர் கடும் தீக்காயங்களுக்குள்ளாகினர்.


1,100 பேரைக் கொள்ளக்கூடிய இந்தச் சிறையில் அளவுக்கு அதிகமாக 1,960 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று புதன்கிழமை காலையில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த கைதிகள் வெளியேற்றப்பட்டிருந்தாலும், 83 பேர் உயிர் இழந்தனர். காயமடைந்தோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இறந்தோரை அடையாலம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிலியின் அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் ஐந்து புதிய சிறைச்சாலைகள் நவீன வசதிகளுடன் உடனடியாக அமைக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சம்பவம் தனக்கு மன வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.


மூலம்

[தொகு]