ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் புவனேசுவரன் தங்கம் பெற்றார்
வியாழன், நவம்பர் 25, 2010
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு
- 20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
சீனாவிம் குவாங் ஷோ நகரில் இடம்பெறும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவின் ஆர். புவனேசுவரன் கராத்தே போட்டியில் தங்கம் வென்றார். 35 வயதுடைய புவனேசுவரன் ராமசாமி 55 கிலோ எடை கொண்ட குமிட்டே பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
கராத்தே போட்டிகள் நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே மலேசிய கராத்தே வீரர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய மண்டலத்தில் தலை சிறந்த கராத்தே வீரராக இருக்கிறார் புவனேஸ்வரன். நேற்று நடந்த போட்டியில் அவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த எமாட் மிகமது அல்மால்க்கி என்பவரை வென்று ஆசியப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து கராத்தே போட்டிகளில் பதக்கம் பெற்ற ஒரே ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். எந்தவகை விளையாட்டிலும் இச்சாதனையை உலகில் ஏழு பேரே பெற்றுள்ளனர்.
“இது எனது கடைசி ஆசியப் போட்டியாக இருக்கும். நான் ஒரு பயிற்சியாளராக வர விரும்புகிறேன். மலேசிய தேசிய விளையாட்டுக் கழகம் அதனை முடிவு செய்ய வேண்டும்,” என புவனேசுவரன் தெரிவித்தார்.
இவர் 2002 ஆம் ஆண்டில் பூசான் நகரில் தங்கத்தையும், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை 1994 இல் பெற்றார்.
மூலம்
[தொகு]- Ramasamy makes history, த இந்து, நவம்பர் 25, 2010