கல்கத்தாவில் பெரும் தீ விபத்து: 24 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 24, 2010

இந்திய நகராக கல்கத்தாவில் இடம்பெற்ற பெரும் தீ விபத்தொன்றில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


நேற்று செவ்வாய் மாலை பார்க் வீதியில் இந்தத் தீ பரவ ஆரம்பித்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்டீவன் கோர்ட் கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியது.


பலர் காயங்களுக்குள்ளாயினர். இவர்களில் பலர் எரிந்த ஆறு மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றவர்கள் ஆவர்.


மின்தூக்கி ஒன்றில் ஏற்பட்ட மின்னொழுக்கே தீ பரவக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் விசாரனைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


2008 ஆம் ஆனில் இருந்து நகரில் மொத்தம் 10 தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தீ பரவுதல் இடங்கு ஒரு சாதாரண நிகழ்வு என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.


தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலர் பின்னர் இறந்துள்ளனர். பலரது உடல்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.


ஸ்டீவன் கோர்ட் என்பது கல்கத்தாவின் பழமையான வானளாவிக் கட்டடங்களில் ஒன்று. இது ஸ்டீவன் அரத்தூன் என்ற ஆர்மேனியரால் 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

மூலம்[தொகு]